பாரிசில் நடைபெற உள்ள நிர்வாண சைக்கிள் சவாரி!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நிர்வாண சைக்கிள் சவாரி நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

நிர்வாணமாக ஊர்வலம், சவாரி செய்யும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் பிரான்சில் La federation francaise de naturisme என்ற அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், நிர்வாண சைக்கிள் சவாரி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளதால், அதனால் ஈர்க்கப்பட்டு இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக குறித்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போட்டி நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை Bois de Vincennes பகுதியில், காலை 10 மணிக்கு ஆரம்பமாகின்றது.

புவி வெப்பமடைதல், சுற்றுச்சூழல் மாசடைவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தப்பட உள்ள இந்நிகழ்வு, Porte Doree மற்றும் Parc de Bercy ஆகிய பகுதிகளையும் கடந்து செல்கிறது.

முன்னதாக, கடந்த 2007ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு நிகழ்வு ஒன்றை திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதை பாரிஸ் காவல்துறை தலைமையகம் ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers