பிரான்சில் தன்னுடைய கணவரிடமிருந்து தப்பிப்பதற்காக பெண் ஒருவர் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு ஜன்னலுக்கால் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் Nantes (Loire-Atlantique) நகரில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன்னுடைய கணவர் மற்றும் 2 வயது மகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கணவன் மற்றும் மனைவிக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாரு காரணமாக, கணவர் அங்கிருந்த கூரான கத்தி ஒன்றை எடுத்து மனைவியையும் குழந்தையும் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த பெண், தனது 2 வயது மகளை கையில் தூக்கிக்கொண்டு வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே பாய்தார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக இரண்டு பேருக்கும் அந்தளவி பெரிய காயமில்லை, எனவும் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.