18 மாதங்களுக்கு முன்பே இஸ்லாம் மதத்திற்கு மாற்றம்... பிரான்ஸில் நடந்த தாக்குதல் குறித்து வெளியாகும் தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் காவல்துறை தலைமையகத்தில் நடந்த தாக்குதலில், தாக்குதல் தாரி 18 மாதங்களுக்கு முன்பே இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் காவல்துறை தலைமையகத்திற்குள் நுழைந்த ஒருவர், அங்கு பணி செய்துகொண்டிருந்த சிலரை கத்தியால் குத்தினார்.

மூன்று பேரை கத்தியால் குத்தியதோடு, படிக்கட்டில் வந்துகொண்டிருந்த இரண்டு பெண்களையும் குத்தினார். உடனடியாக மற்றொரு பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்க, அந்த நபரால் சுடப்பட்டவர்களில், மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்தனர்.

மோசமாக காயமடைந்துள்ள மற்றொரு பெண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், தாக்குதல் நடத்திய அதிகாரிக்கு 45 வயது இருக்கும் எனவும், பாரிஸ் பொலிஸ் படையில் பணியாற்றியிருக்கும் இவர் அதே அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப நிபுணராக இருந்துள்ளார்.

உள்துறை அமைச்சர் Christophe Castaner இந்த சம்பவம் குறித்து கூறுகையில், குறித்த அதிகாரி தாக்குதல் நடத்துவார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. அவரிடம் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என்று கூறியுள்ளார்.

குறித்த நபர் 18 மாதங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அருகில் வசிப்பவர்கள் கூறுகையில், மிக அமைதியான சுபாவம் கொண்டவர். பள்ளிவாசலுக்கு போவதையும் வருவதையும் பார்த்துள்ளோம். ஆனால் அவர் சந்தேகப்படும் படியான என நடத்தையும் ஒருபோதும் கொண்டிருந்ததில்லை, இதை நம்பவே முடியவில்லை என்று அவருக்கு 9 மற்றும் 3 வயதுகளில் இரண்டு பிள்ளைகள் உள்ளதாக கூறியுள்ளனர்.

தற்போது வரை குறித்த நபர் எதற்காக தாக்குதல் நடத்தினால் என்பது தெரியவில்லை எனவும் பயங்கரவாத தடுப்பு விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் சாதரணமான விசாரணை மட்டுமே நடைபெற்று வருதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்