பாரிசை ஸ்தம்பிக்க வைத்த ஆர்ப்பாட்டம்..! தீயணைப்பு படையினரால் வெடித்த வன்முறை

Report Print Kabilan in பிரான்ஸ்
152Shares

பிரான்சின் பாரிஸ் நகரில் பல்வேறு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தீயணைப்பு படையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் பாரிசில் நேற்றைய தினம், தொழிற்சங்கத்தின் தீயணைப்பு படையினர் ஆயிரக்கணக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணியில் ஈடுபடும்போது தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்தும், சம்பள உயர்வை கோரியும் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நண்பகலுக்கு பின்னதாக ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சில நிமிடங்களிலேயே பலத்த வன்முறை வெடித்தது. அப்போது, பொலிசாரின் மீது தீயணைப்பு வீரர்கள் பட்டாசுகளை கொழுத்தி வீசினர். இதனால் பெரும் குண்டுவெடிப்பு சத்தம் போல் பாரிய சத்தம் எழுந்தது.

அதன் பின்னர் பொலிசார் பதில் தாக்குதல் நடத்தி வன்முறையை கட்டுப்படுத்தினர். Place de la Republique-யில் இருந்து ஆரம்பித்த இந்த நடைபயண ஆர்ப்பாட்டம், Place de la Nation-யில் சென்று முடிந்தது.

தொழிற்சங்கத்தினர் தெரிவித்ததன்படி இந்த ஆர்ப்பாட்டத்தில் 5,000யில் இருந்து 10,000 வரையான தீயணைப்புப்படை வீரர்கள் ஈடுபட்டனர். அவர்கள் எங்களது பணியில் நாங்கள் தீய பக்கத்தை மட்டுமே அனுபவிக்கின்றோம் என்று கோஷம் எழுப்பினர்.

AP Photo/Michel Euler
AP Photo/Michel Euler

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்