சோகங்களையும் சுமைகளையும் தாங்கிய... கவிதை நூல் வெளியீட்டு விழா

Report Print Dias Dias in பிரான்ஸ்

தனக்கு தொடராக ஏற்பட்ட வேதனை நிறைந்த நிகழ்வுகளும் அனுபவங்களுமே என்னை ஒரு கவிஞராக்கியது என கவிதாயினி பொன் மஞ்சுளா தெரிவித்தார்.

பாரிசில் கவிதாயினி பொன் மஞ்சுளாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக பல மக்களின் ஒத்தாசையுடன் நடைபெற்றது.

வேகமாகப் பரவி வரும் கணனி யுகத்தில் நூல் வெளியீட்டு விழா புலம் பெயர் தேசமெங்கும் பரவலாக இடம் பெறுகின்றன.

அந்த வகையில் பொன் மஞ்சுளாவின் நூல் வெளியீட்டு விழா ஒரு மைல் கல்லாக அமைந்தது எனக் கூறலாம்.

மேலும், தனது நுளின் ஏற்புரையில் ஒரு பெண்ணால் தனித்து நின்று சாதனைகளை படைப்பது என்பது மிகவும் இலகுவான காரியமல்ல அந்த அனைத்து வலிகளையும் அனுபவித்த ஒரு பெண்ணாகவே இந்த நூலை வெளியிடுகின்றேன்.

இதுபோன்ற சாதனைகளை ஒவ்வொரு பெண்ணும் தனித்து நின்று படைக்க வேண்டும் என்னுடைய கணவனை இழந்த பின்னரும் நான் தனிமரமாக நின்று என்னுடைய பிள்ளைகளுக்கு சிறந்த ஒரு தாயாகவும் இருந்தே இன்று இந்த கவிதை நூலை வெளியிடுகின்றேன் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில், பொன்னையா லில்லி திரேசா மற்றும் பொன் மஞ்சுளாவின் மூன்று பிள்ளைகள் மற்றும் அகிலா சிவராஐசிங்கம் (இளைப்பாறிய பிரெஞ்சு இராணுவப் பிரிவின் அருங்காட்சியக சீருடை வடிவமைப்பாளர்) ஆகியோர் மங்கள விளக்கேற்றியுள்ளனர்.

அதன் பின்னர் அப்பையா யோகநாதனின் வரவேற்புரை இடம்பெற்றுள்ளது. அவரை தொடர்ந்து பிரதம விருந்தினர் குகன் குணரெத்தினம் (சமூக சேவையாளர்) உரையாற்றினார். அத்துடன் நூல் வெளியீட்டு விழாவை அவரே தலைமை தாங்கி நடத்தி வைத்தார் .

நூல் பற்றிய கருத்துப் பகிர்வை கவிஞர் தமிழ்மணி செல்லையா தேவன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

கருத்குப் பகிர்வில் பொன் மஞ்சுளாவின் எண்ணங்களின் வெளிப்பாடும் சமூகத்தில் நடைபெறும் அநீதிகளும் உருவாக்கிய உணர்வின் வெளிப்பாடு கவிதைகளாய் பிறந்திருப்பதாச் சொன்னார்.

அடுத்து இலக்கியவாதியும் கவிதாயினியும் சிறுகதை எழுத்தாளருமான திருமதி.தமிழ்ப் பிரியா இளங்கோவன் அவர்கள் கருத்துப் பகிர்வை தொடங்கி வைத்தார்.

தான் பெண்ணாக இருந்து கொண்டு பொன் மஞ்சுளாவின் கவிதை வரிகளை பார்த்தவுடன் அத்தனை சோகங்களையும் சுமைகளையும் தாங்கிய நிலையில் இவ்வளவு வலி சுமந்த அனுபவமே அவரால் இந்த வலிசுமந்த வரிகளைப் பிரசவிக்க முடிந்ததாகக் கூறினார்

நூல் வெளியீட்டு நிகழ்வின் முதலாவது பிரதியை இலங்கை பழையமாணவர் சங்க ஒன்றியத்தலைவர் செ.பாஸ்கரன் அவர்களும் இரண்டாவது பிரதியை இளைப்பாறிய (பிரெஞ்சு இராணுவப் பிரிவின் அருங்காட்சியக சீருடை வடிவமைப்பாளர்). திருமதி அகிலா சிவராஐசிங்கம் அவர்களும் .

மூன்றாவது பிரதியை ஊடகவியலாளர் இரா.தில்லைநாயகம் பெற்றுக்கொண்டதுடன் கருத்துரை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்