பிரான்சிலிருந்து லண்டன் வந்த பேருந்து விபத்து...உயிருக்கு போராடும் 4 பேர்! வெளியான புகைப்படம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் இருந்து லண்டனுக்கு சென்ற பேருந்து விபத்தில் சிக்கியதால், அதில் இருந்த 33 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், 4 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து புறப்பட்ட Flixbus என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, A1 மோட்டார் வே பகுதியில் விபத்தில் சிக்கியது.

குறித்த பேருந்தில் பிரான்ஸ், ஸ்பேயின், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, ரோமானியா, ரஷ்யா மற்றும் பிரித்தானியாவை சேர்ந்த பயணிகள் 33 பேர் இருந்ததாகவும், அதில் 29 பேருக்கு சிறிய அளவிலான காயம் எனவும், 4 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Picture: Getty)

இதில் விபத்தில் சிக்கியவர்கள் விவரம் மற்றும் பெயர்கள் குறித்து எதுவும் வெளியாகவில்லை. பிரித்தானியா அதிகாரிகள், பிரான்ஸ் அதிகாரிகளிடம் தொடர்பில் இருப்பதாகவும், அதில் பிரித்தானியாவை சேர்ந்தவர்களின் நிலை குறித்து கேட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Picture: Getty)

குறிப்பாக சிறிய அளவிலான காயம் ஏற்பட்டவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் விபத்தில் சிக்கிய பேருந்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

(Picture: Getty)

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்