பிரான்சில் பொலிசார் தட்டுப்பாடு ..... அகதிகள் வெளியேற்றம் தாமதம்!

Report Print Abisha in பிரான்ஸ்

பிரான்ஸ் Aubervilliers நகரில், தங்கியுள்ள அகதிகள் வெளியேற்றும் பணிகள் பொலிசார் தட்டுப்பாட்டால் தோல்வியடைந்துள்ளது.

அகதிகள் முகாமில், தங்கியிருந்த அகதிகளை பாதுகாப்பாக வெளியேற்ற பிரான்ஸ் அரசு தீர்மானித்திருந்தது. அதன்படி சில காவல் அதிகாரிகள் மற்றும் Utopia 56 என்ற அகதிகள் தொண்டு நிறுவனத்தினர் முகாமில் வந்தடைந்தனர்.

இதில், 5பேருந்துகளும் கொடுவரப்பட்டது. ஆனால் அங்குள்ள அகதிகளை கட்டுப்படுத்த போதிய அளவில் பொலிசார் இல்லை. இதனால், இந்த திட்டம் தோல்வியடைந்தது.

அகதிகளை பேருந்தில் ஏற்ற முற்பட்ட போது, அவர்கள் அங்கும் இங்குமாக தப்பி ஓடதுவங்கியுள்ளனர். இதனால், இந்த பணிகள் கைவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Aubervilliers நகரில் மொத்தம் 2000 அகதிகள் இருப்பதாக Utopia 56 தொண்டு நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்