காலாவதியான மாவில் ரொட்டி: வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டவர் விடுதலை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

சீனாவில் பேக்கரி ஒன்றில் காலாவதியான மாவை பயன்படுத்தி ரொட்டி செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரான்சின் Normandyயைச் சேர்ந்த Laurent Fortin, சீனாவிலுள்ள ஷாங்காய்க்கு பேக்கரி ஒன்றை நடத்துவதற்காக சென்றார்.

2017ஆம் ஆண்டு அவரது பேக்கரியில் சோதனை செய்ய வந்த அதிகாரிகள், அங்கு காலாவதியான மாவு மூட்டைகள் இருப்பதையும், ரொட்டி செய்ய அவை பயன்படுத்தப்படுவதையும் கண்டுபிடித்து, அவரை கைது செய்தனர்.

connexionfrance

அவருக்கு இரண்டாண்டுகள், ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனையும், 7,743 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதியின் சீன வருகையை ஒட்டி Fortin ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.ஆனால் அந்த நேரத்தில் அவரால் சீனாவை விட்டு வெளியேற இயலவில்லை.

எனவே அவரது குடும்பத்தினர் அவரது வழக்கில் தலையிடுமாறு பிரான்ஸ் அரசைக் கேட்டுக்கொண்டனர். அதன்படி, பிரான்ஸ் அரசின் தலையீட்டின் பேரில், விடுவிக்கப்பட்ட Fortin, நவம்பர் மாதம் 29ஆம் திகதி பிரான்ஸ் திரும்பினார்.

அவர் பிரான்ஸ் திரும்பியுள்ளதையடுத்து அவரது குடும்பத்தினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்