பிரான்சில் பொலிசார் மீது கத்தியுடன் பாய்ந்த நபர்: சுட்டுப் பிடித்த பொலிசார்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்த ஒருவரை பொலிசார் நெருங்கியபோது, அவர் அவர்கள் மீது கத்தியுடன் பாய்ந்ததையடுத்து பொலிசார் அவரை சுட்டனர்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் பாரீஸுக்கு வெளியே Villejuif என்ற இடத்தில் ஒரு நபர் கத்தியால் குத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார், இருவர் காயமடைந்தனர்.

அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன், Metz என்ற நகரில் மற்றொருவர் பொதுமக்களைக் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.

ஒரு கூட்டம் பொலிசார் அவரை நெருங்க, ’அல்லாஹூ அக்பர்’ என்று கத்தியபடி பொலிசாரை நோக்கி கத்தியுடன் பாய்ந்துள்ளார் அபர். உடனே பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

தொடையில் குண்டுக்காயங்களுடன் விழுந்த அவரை சுற்றி வளைத்த பொலிசார், அவரை கைது செய்து விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

விசாரணையில், அவர் தேசிய பாதுகாப்புக்கு பயங்கர ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்ற பட்டியலில் உள்ளவர் என்பதும், தீவிரவாத குழுக்களை ஆதரிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் முன் அவரை விரைந்து பிடித்த பொலிசாருக்கு, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Christophe Castaner தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்