காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலியர்களுக்கு பிரெஞ்சுக் கலைஞரின் வித்தியாசமான செய்தி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும், எதிர்காலம் குறித்து எச்சரிக்கும் வகையிலும் பிரெஞ்சுக் கலைஞர் ஒருவர் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார்.

பிரான்சின் Nouvelle Aquitaine பகுதியில், கடற்கரை மணலில், Jben என்னும் மணல் ஓவியர் பிரமாண்ட கோலா ஒன்றின் படத்தை வரைந்துள்ளார்.

உங்கள் பூமியை அணைத்துக்கொள்ளுங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஓவியத்தில் அவுஸ்திரேலியாவுக்கே உரிய விலங்கான கோலா ஒன்று பூமியை அணைத்துக்கொள்வது போன்ற காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் முதல் பற்றியெரியும் காட்டுத்தீயால், தென் கிழக்கு அவுஸ்திரேலியாவின் ஒரு பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

எட்டு மில்லியன் ஹெக்டேர் வரை எரிந்து நாசமாகிப்போனது.சுமார் 2,000 வீடுகள் அழிந்துபோயின. 500 மில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் கொல்லப்பட்டுவிட்டன.

நம்மில் ஒரு பாகமான அவுஸ்திரேலியா எரிவதைப் பார்க்கிறோம். ஆகவே, அவுஸ்திரேலிய மக்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவிப்பதோடு, நேர்மறையான ஒரு செய்தியையும் அனுப்ப விரும்பினேன் என்கிறார் Jben.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்