நெருங்கி விட்டது பிரெக்சிட்: சில முக்கிய கேள்விகளும் பதில்களும்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரித்தானியா ஜனவரி 31 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது என்பது முடிவாகிவிட்ட நிலையில், பிரெக்சிட்டுக்குப்பின் பிரித்தானியர்கள் பிரான்ஸ் செல்வதற்கு விசா தேவையா என்பது முதலான சில கேள்விகளும், அவற்றிற்கான பதில்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பிரெக்சிட்டுக்குப்பின் பிரான்சுக்கு செல்ல விசா தேவையா?

பிரெக்சிட்டுக்குப்பின், 2020 டிசம்பர் வரையில், பிரான்ஸ் செல்வதற்கு பிரித்தானியர்களுக்கு விசா தேவையில்லை.

ஆனால், implementation period முடிந்தபின் இந்த நிலை மாறலாம். இது தொடர்பாக வேறு சந்தேகங்கள் இருந்தால், பிரான்சுக்கு பயணிப்போர், தங்கள் உள்ளூர் பயண ஏற்பாட்டாளரை அணுகி தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்லலாம்.

Transition period முடிந்த பிறகு பிரான்ஸ் செல்வதற்கு விசா தேவைப்படுமா?

Implementation period முடிந்தபிறகு பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்வதற்கு விசா தேவைப்படுமா என்பது குறித்து இப்போதைக்கு தெரியவில்லை.

டிசம்பர் 2020 வாக்கில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய இருப்பதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உறிதுயளித்துள்ளார்.

அந்த ஒப்பந்தத்தில், பிரித்தானிய குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவிற்கும் பயணம் செய்வது தொடர்பான விடயங்களும் இடம்பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பிரெக்சிட்டுக்குப்பின் எனது பாஸ்போர்ட்டின் நிலை என்ன?

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு முன் வழங்கப்படும் பாஸ்போர்ட்கள், burgundy நிறத்திலேயே தொடரும்.

ஆனால், ஜனவரி மாதம் 31ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதும், பாஸ்போர்ட்கள் முற்றிலும் புதிய வடிவைப்பெறும்.

பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான அத்தனை விடயங்களும் அகற்றப்பட்டு, ஆண்டின் மைய வாக்கில் புதிய நீல நிற பாஸ்போர்ட்கள் வலம் வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்