பிரான்ஸில் புலம்பெயர்ந்தோர்கள் அதிரடியாக வெளியேற்றம்..! தொடரும் அவலம்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் காவல்துறையினர் வடக்கு பாரிஸ் பகுதியில் குடியேறியவர்களை வெளியேற்றும் பணியை மீண்டும் மேற்கொண்டுள்ளனர்.

செவ்வாயன்று வடக்கு பாரிஸில் உள்ள சட்டவிரோத முகாம் தளத்திலிருந்து புலம்பெயர்ந்தோர்கள் மீண்டும் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.

சட்டவிரோத குடியேற்றம் குறித்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருவதைக் காட்ட அரசாங்கம் தொடர்ந்து அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையைில், தற்போது மீண்டும் இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வடக்கு பாரிஸில் உள்ள தற்காலிக முகாம் தளத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற தொடங்கியுள்ளதாக பிரான்ஸ் பொலிசார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

2016ல் கலீஸில் பெரிய புலம்பெயர்ந்தோர் முகாம் மூடப்பட்டதிலிருந்து, பல அகதிகள் பாரிஸுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

சில மாதங்களுக்குப் பிறகு புலம்பெயர்தோர்கள் வெவ்வேறு பகுதிகளில் மீண்டும் ஒன்று கூடி வரும் நிலையில், இதை கண்டறிந்த அதிகாரிகள் பலமுறை சட்டவிரோத முகாம்களை அகற்றினர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers