பிரான்சில் முதல் பலி... நள்ளிரவில் மரணம்! கொரோனாவால் பலர் பாதிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்
1436Shares

பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 60 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்திருப்பதாக, சுகாதார ஆணையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சீனாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. அதில் குறிப்பாக பிரான்சில் 17 பேர் இந்த நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது பிரான்ஸ் குடியுரிமை பெற்ற நபர் உயிரிழந்துவிட்டதாக சுகாதார ஆணையத்தின் இயக்குனர் Jerome Salomon தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுகாதார துறை இயக்குனர் Jerome Salomon கூறுகையில், இரண்டு பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் பாரிசை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த செவ்வாய் கிழமை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக Pitie Salpetriere மருத்துவமனையில் மிகவும் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அன்றைய தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

இதே போன்று Strasbourg-ஐ சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க நபர் சமீபத்தில் இத்தாலிக்கு சென்று வந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்