பாதுகாப்பு இல்லாமல் செல்ல சொல்கிறீர்கள்! நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரான்ஸ் மருத்துவர்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் மருத்துவர் ஒருவர் பாதுகாப்பு உபகரணங்கள் அந்தளவிற்கு இல்லை என்பதை முன்னிலைப்படுத்தும் விதமாக நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் தற்போது வரை 22,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,100 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இந்த நோயின் தீவிரத்தை குறைப்பதற்காக அங்கிருக்கும் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரான்சின் Pomérols-ல் வசித்து வரும், Alain Colombie என்ற மருத்துவர் கடந்த 22-ஆம் திகதி சமூக ஊடகங்களில் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Alain Colombie(Image: Newsflash/@alain.colombie)

61 வயது மதிக்கத்தக்க Alain Colombie முற்றிலும் நிர்வாணமாக இருப்பதை பார்க்க முடிகிறது. அவர் தன்னுடைய தலையில், வெள்ளை நிறத்தாலான பேப்பரில் cannon fodder என்ற சொற்களை எழுதி, அதை கவசமாக அணிந்துள்ளார்.

மேலும், அதில் அவர் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பிற்காக இதை செய்வதாக குறிப்பிட்டுள்ள இவர்,

ஜனவரி மாத இறுதியில் இருந்து நான் COVID-19 பற்றி தொடர்புகொண்டிருந்தாலும், ஒரு சரியான அணுகுமுறை இல்லை(பாதுகாப்பு உபகரணங்களில்) என்றே நினைக்கிறேன்.

Alain Colombie(Image: Newsflash/@alain.colombie)

ஜனாதிபதி மேக்ரான், நீங்கள் உங்கள் வீரர்களை ஆயுதங்கள் அல்லது பாதுகாப்பு இல்லாமல் (முகமூடிகள், ஜெல், முழு நீள உடை) முன்னால் செல்லச் சொல்கிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பதை முன்னிலைப்படுத்துவதற்காக இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர், நான்கு பொது பயிற்சியாளர்கள் 10,000 நோயாளிகளைப் பராமரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு பகுதியில் பணியாற்றுவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், மேயரின் அலுவலகம் தனக்கு 18 முகமூடிகளை மட்டுமே அனுப்பியதாக, இது மிகவும் குறைவு என்று புகார் கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்