கொரோனா தடுப்பூசி உருவாக்கும் உலகளாவிய மருந்து நிறுவனத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி சம்மன்..! வெளிச்சத்திற்கு வந்த மிக மோசமான திட்டம்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், அடுத்த வாரம் தன்னை சந்திக்கும் படி உலகளாவிய மருந்து நிறுவனமான சனோபியின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க சந்தைக்கு முன்னுரிமை அளிக்க முடியும் என்று நிறுவனம் பரிந்துரைத்ததை அடுத்து பிரான்ஸ் ஜனாதிபதி சம்மன் அனுப்பியுள்ளார்.

மேக்ரோன் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பால் ஹட்சன் செவ்வாய்க்கிழமை சந்திப்பார்கள் என்று எலிசி அரண்மனை தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் வெளியிட்ட அறிக்கையில், எந்த கொரோனா தடுப்பூசியும் உலகின் பொது நன்மைக்கு என கருதப்பட வேண்டும், சந்தையின் சட்டங்களுக்கு உட்பட்டு அல்ல என்று மேக்ரோன் கூறினார்.

பாரிஸ் தலைமையிடமாக கொண்டு உலகின் பல முக்கிய நாடுகளில் இயங்கும் சனோபி நிறுவனம் தனது முந்தைய கருத்துக்களை தெளிவுபடுத்தியுள்ளது, விரைவில் ஐரோப்பிய அரசாங்கங்களுடன் இணைந்து உற்பத்தியைத் தொடங்குவதாகவும் கூறியுள்ளது.

அமெரிக்காவின் பயோமெடிக்கல் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் (BARDA) அதன் ஒத்துழைப்பு விரைவில் உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்கும் என்று சனோபி கூறியது..

இதே போன்ற வாய்ப்புகளை ஐரோப்பாவிற்குள் ஆராய்ந்து வருவதாக அது கூறுகிறது.

எங்கள் தடுப்பூசி அனைவருக்கும் அணுகுவதற்காக இதுவரை கண்டிராத சூழ்நிலைகளில் நாங்கள் எப்போதும் உறுதியுடன் இருக்கிறோம் என்று நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாங்கள் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் மற்றும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்துடன் மிகவும் ஆக்கபூர்வமான உரையாடல்களை நடத்தி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்