பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவில் அடுத்த மாதம் முதல்... பிரபல விமான நிறுவனம் முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்
476Shares

பிரான்சில் பிரபல விமான நிறுவனமான ஈஸி ஜெட் ஜுன் 15 முதல் மீண்டும் துவக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் விமான நிறுவனங்கள், தங்களின் விமான சேவையை நிறுத்தியுள்ளது.

இருப்பினும் தற்போது கொரோனாவின் பாதிப்பு மெல்ல, மெல்ல குறைந்து வருவதால், சில விமானநிறுவனங்கள் உள்நாட்டு சேவையை துவங்க முடிவு செய்துள்ளது.

அதன் படி பட்ஜெட் விமான நிறுவனமான Easyjet ஜூன் 15 முதல் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் விமான சேவைகளை மீண்டும் தொடங்க எண்ணியுள்ளதாக அறிவித்துள்ளது.

மார்ச் மாதத்திலிருந்து கிட்டத்தட்ட அனைத்து விமானங்களையும் நிறுத்தியுள்ள குறித்த நிறுவனம், ஜூன் 15 முதல் சில விமானங்களை மீண்டும் தொடங்க எண்ணியுள்ளதாக அறிவித்துள்ளது.

(Image: AFP via Getty Images)

விமானங்களை அனுமதிக்க போதுமான தேவை இருப்பதாக நாங்கள் நம்புகின்ற பாதைகளில் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் மறுதொடக்கம் செய்யப்படும், முக்கியமாக பிரித்தானியா மற்றும் பிரான்சின் உள்நாட்டு விமானங்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரான்சிற்குள் நுழைவது தற்போது பெரிதும் தடை செய்யப்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதனால் சர்வதேச பயணத்தின் நிலைமை தெளிவாக இல்லை,

ஜூன் 15 முதல் ஜேர்மனி உட்பட சில ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளை மீண்டும் திறக்க உறுதியாக உள்ளன. ஆனால் பிரான்ஸ் அரசு இந்த விஷயத்தில்(எல்லைகள் திறப்பதில்) எச்சரிக்கையாக இருந்து வருகிறது,

வெளியுறவு மந்திரியான Jean-Yves Le Drian பிரான்ஸ் வானொலி நிலையமான LCI-யிடம் கூறுகையில், ஜூன் 15 முதல் படிப்படியாக, ஐரோப்பிய எல்லைக் கட்டுப்பாடுகளை பொதுமைப்படுத்துவதைத் தொடங்க முடியும் என்று நான் நினைப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்