பிரான்ஸ் விமான நிலையத்தில் நடிகர் சுஷாந்த் சிங்கை பார்த்தேன்... அப்போது அவர்? இளம் பெண் சொன்ன ஆச்சரியமான தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் உயிரிழந்த நிலையில், அவரைப் பற்றி இளம் சொன்ன சில தகவல்கள் ஆச்சரியமாக உள்ளது.

கடந்த 14-ஆம் திகதி இந்திய திரையுலகம் ஒரு திறமை வாய்ந்த இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் என்பவரை இழந்தது.

ஒரு திறமையான மனிதர் மற்றும் ஒரு புத்திசாலி. ஒரு பொறியியலாளராக விரும்புவதிலிருந்து இந்திய திரையுலகில் ஒரு நடிகராக மாறுவதற்கான அவரது பயணத்தைப் பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கிறார்களோ இல்லையோ குறிப்பாக அவரது ரசிகர்கள் அறிந்திருப்பார்கள்.

அந்தளவிற்கு வாழ்வில் ஒரு உயரத்தை அடைவதற்கு கடுமையாக முயற்சித்தவர்.

டெல்லியின் குலாச்சி ஹன்ஸ்ராஜ் மாடல் பள்ளியில் படித்தபின், சுஷாந்த் சிங் ராஜ்புத் டில்லியில் உள்ள டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் இளங்கலை பட்டம் படிக்க முடிவு செய்தார்.

இதனால் 2003-ல் சுஷாந்த் சிங் ராஜ்புத் AIEEE இல் AIR #7-ஐப் பெற்றார். அதுமட்டுமின்றி, அவர் இயற்பியல் தேசிய ஒலிம்பியாட் வெற்றியாளராகவும் இருந்தார். மேலும் ஏழுக்கும் மேற்பட்ட பொறியியல் நுழைவுத் தேர்வுகளை அவரால் முடிக்க முடிந்தது.

இருப்பினும், நடிப்பின் மீதான அவரது ஆர்வம் தனது மூன்றாம் ஆண்டு கல்லூரி படிப்பை முடிக்க விடாமல் நிறுத்திவிட்டது. படிப்பை விட்ட அவர் தனது நடிப்பை தொடர துவங்கினார்.

அவர் நினைத்தது போன்றே ஒரு சிறந்த நடிகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது அந்த அற்புதமான நடிகர் இல்லை என்றாலும், அவரைப் பற்றி திரைப்பிரபலங்க்ள், ரசிகர்கள் பலரும் அவரை சந்தித்த அனுபவம் குறித்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில், PhD Scholar என்று கூறப்படும், Namrata Datta என்ற பெண் அவரை பிரான்சின் பாரிஸ் விமான நிலையத்தில், சந்தித்ததாகவும், அப்போது நான் அவரை ஒரு இயற்பியலாளர்(Physicist) என்று நினைத்ததாகவும், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், பாரிஸ் விமானநிலையத்தில் அவர் எனக்கு குவாண்டம் இயற்பியல் குறித்து விளக்கிய விதம் தான், அவரை ஒரு இயற்பியல் மேதை என்று நினைக்க வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த சந்திப்பின் போது, அவரது பிறந்த நாள் ஜனவரி 21 மற்றும் என்னுடைய ஜனவரி 26 அதைப் பற்றி பேசினோம். பின்னர் டி.என்.ஏ என் எக்ஸ்ரே படிகவியல் முறை பற்றி விவாதித்தோம்

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு. அவர் ஒரு பாலிவுட் நட்சத்திரம் என்று எனக்குத் தெரியாது. அவர் பிரான்சில் படிக்கும் இயற்பியலாளர் என்று நினைத்தேன். அவர் இயற்பியலை விளக்கும் விதம் அப்படி இருந்தது.

அதன் பின்னர் தான் அவர் நடிகர் என்று கூறினார். ஆனால், நம்புவது எனக்கு கடினமாக இருந்தது. ஏனெனில் அந்தளவிற்கு இயற்பியலைப் பற்றி பேசினார்.

சுஷாந்த் என்னிடம் நீங்கள் மாற்ற விரும்பும் ஒன்று என்ன என்று கேட்டார். அதற்கு நான் நகைச்சுவையாக ஒரு பணக்கார பையனை திருமணம் செய்து நிறைய குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என்றேன், இதே கேள்வியை நான் அவரிடம் அதையே கேட்டபோது, ​​அவர் இயற்பியலை படிக்க விரும்புவதாக கூறினார்.

தொடர்ந்து, அவர் இயற்பியல் படிப்பில் சேர உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியுமா என்று என்னிடம் கேட்டார். எங்களின் விவாதம் இரண்டு கிளாஸ் பீருடன் 5 மணி நேரம் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்