பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாட்டு மக்களுக்கு இந்த விதி கட்டாயம் கிடையாது! உறுதி செய்த நாடு: முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்

இங்கிலாந்திற்கு வரும், குறைந்த ஆபத்து கொண்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் உறுதிபடுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது வரை 43,995 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அரசு ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனமாக எடுத்து வருகிறது.

அதில் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்பு பிரித்தானியாவுக்கு வரும் வெளிநாட்டினர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்த வேண்டும். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜேர்மனி போன்ற குறைந்த ஆபத்துள்ள நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட கொள்கை நீக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லாத நாடுகளின் முழு பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுவதுடன், புதிய நடவடிக்கைகள் ஜூலை 10 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 14 நாள் சுய தனிமை கொள்கை நடைமுறையில் இருக்கும் என்று கூறப்படுவதால், வெள்ளிக் கிழமை பட்டியல் வெளியானால் மட்டுமே, முழு விபரம் தெரியவரும்.

பொது சுகாதார இங்கிலாந்து, முக்கிய ஆலோசனைக்கு பிறகு, உயிரியல் பாதுகாப்பு மையத்தால் ஆபத்து மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

விலக்கு அளிக்கப்பட்ட நாடுகள்(பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகள்) பட்டியல் நிலையான மதிப்பீட்டில் வைக்கப்படும். ஆனால் இங்கு சுகாதார அபாயங்கள் அதிகரித்தால், சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம்.

ஆனால், விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இங்கிலாந்திற்கு வரும் மக்கள் சுயமாக தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதே அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விலக்கு அளிக்கப்பட்டுள்ள நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் நிச்சயமாக சுய தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும், அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்