பிரான்சில் வீடு ஒன்றில் 3 ஆண்டுகளாக பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம்!

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் கடந்த மூன்று ஆண்டுகளாக பதப்படுத்தப்பட்ட நிலையில், பெண்ணின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Nîmes நகரில் இருக்கும் வீடு ஒன்றில் பொலிசார் மேற்கொண்ட சோதனையின் போது, அந்த வீட்டில் இருக்கும் குளிர்சாதனப்பெட்டியில், பெண்ணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்ணிற்கு வயது சுமார் 60 இருக்கும் எனவும், 2017 ஆம் ஆண்டில் அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும், குறித்த பெண்ணின் சடலத்தின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதால், அதன் பின்னரே மேலதிக விசாரணைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே Nîmes,நகரில் தான் கடந்த பிப்ரவரி மாதம் இதேபோன்று பெண் ஒருவரது சடலம் குளிர்சாதன பெட்டிக்குள் இருந்து மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்