கோமாவில் இருந்த பிரான்ஸ் இளவரசி மரணம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் மிக மோசமான சாலை விபத்தைத் தொடர்ந்து கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்த இளவரசி ஹெர்மின் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

54 வயதான இளவரசி ஹெர்மின், பாரிஸில் வசித்து வந்தபோது, ஜூன் மாதம் நடந்த மிக மோசமான சாலை விபத்தில் காயமடைந்தார்.

இந்த நிலையில் சிகிச்சையின் ஒருபகுதியாக மருத்துவ ரீதியான கோமாவில் வைக்கப்பட்டிருந்த அவர், நான்கு வாரங்களுக்கு பின்னர் ஜூலை 3 ஆம் திகதி மரணமடைந்துள்ளார் என குடும்பத்தினர் அறிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இளவரசி ஹெர்மின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இளவரசி ஹெர்மின் தமது இளமைப்பருவத்தில் Dior நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து சொந்த நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

1996 ஆம் ஆண்டு புதினம் ஒன்றை எழுதி வெளியிட்ட அவர், அது மிகுந்த வரவேற்பை பெறவே, தொடர்ந்து 6 புதினங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

1999 ஆம் ஆண்டு பிரான்ஸ் தொழிலதிபரான Alastair Cuddeford என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக 2009 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

இளவரசி ஹெர்மின் கிளெர்மான்ட்-டோனெர்ரேயின் 11 வது டியூக் என அறியப்படும் சார்லஸ் ஹென்ரியின் ஒரே ஒரு மகளாவார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்