பிரான்சிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
799Shares

பிரான்சிலிருந்து பிரித்தானியா வருபவர்கள் குறிப்பிட்ட ஆவணத்தை நிரப்பியே ஆகவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 10 முதல், பாதுகாப்பான நாடுகள் என கருதப்படும் நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு வருவோருக்கு (பிரான்ஸ் உட்பட) தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்களிக்கத் துவங்கியது பிரித்தானியா.

அப்படி சுய தனிமைப்படுத்துதலிலிருந்து விலக்களிக்கப்பட்டாலும், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு வருபவர்கள், பிரான்சிலிருந்து புறப்படுவதற்கு முன்பே contact locator form என்னும் படிவத்தை நிரப்பியிருக்கவேண்டும்.

Contact locator form என்பது, நீங்கள் பிரித்தானியாவில் எங்கு தங்கப்போகிறீர்கள் என்பது குறித்த விவரங்கள், உங்கள் தொலைபேசி எண், உங்களுக்கு திடீரென உடல் நலமில்லாமல் போனால் யாரை தொடர்புகொள்ளலாம், என்பது குறித்த விடயங்களை விவரமாக விவரிக்கும் ஒரு படிவமாகும்.

இந்த படிவம் ஒன்லைனிலும் உள்ளது. அதை பிரிண்ட் அவுட் எடுத்து உங்களுடன் நீங்கள் வைத்திருக்கவேண்டும். நீங்கள் பயணம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அதை சமர்ப்பிக்க முடியாது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

அதேபோல், பெட்டி படுக்கைகளை தூக்கிக்கொண்டு பயணம் புறப்படும் கடைசி நேரத்திலும் அதை நிரப்ப முயற்சிக்கவேண்டாம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்