பிரான்சிலிருந்து தப்பியோட முயன்ற அமெரிக்கர்: வீட்டில் பொலிசார் கண்ட அதிரவைத்த காட்சி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சிலிருந்து ஜகார்தா தப்பிச் செல்ல முயன்ற ஒருவரை விமான நிலையத்தில் மடக்கிப் பிடித்தனர் பொலிசார்.

ஜகார்தாவில் வாழும் Laure Bardina-Kruger (52) அங்கு பிரெஞ்சு மொழி ஆசிரியையாக பணி செய்பவர்.

அவரும், தனது 50 வயதுகளிலிருக்கும் பிரெஞ்சு அமெரிக்க குடிமகனான அவரது கணவர் Billy Krugerம் பிரெஞ்சு கிராமமான Narbonneக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

வழக்கமாக தன்னை தொலைபேசியில் அழைத்துப் பேசும் தன் மகள் அழைக்காததால், பொலிசாருக்கு தகவலளித்தார் Laureயின் தந்தை.

Laureயை தேடிப்போன பொலிசாரால், அவரது வீட்டில் மழைநீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த அமைப்பினுள் துண்டம் துண்டமாக வெட்டி மறைக்கப்பட்டிருந்த அவரது உடலைத்தான் கண்டுபிடிக்க முடிந்தது.

இதற்கிடையில் பிரான்சிலிருந்து ஜகார்தா தப்பிச் செல்ல முயன்ற Billyயை, Toulouse விமான நிலையத்தில் பொலிசார் மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில், தங்கள் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மனைவியை கத்தியால் குத்திக்கொன்று, அவரது உடல் பாகங்களை வீட்டில் மழைநீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த அமைப்பினுள் மறைத்துவைத்ததை ஒப்புக்கொண்டார் Billy.

Billyயைக் கைது செய்த பொலிசார், அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்