பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை தகவல்... அடுத்த இரண்டு வாரத்தில் ICU-வில் அதிகமானோர் சேர்க்கப்படலாம்: அரசு அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் அடுத்த இரண்டு வாரத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பிரிவில் அதிகமானோர் சேர்க்கப்படலாம் என்பதால், நாட்டு மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நாட்டின் சுகாதார துறை அமைச்சர் ஆலிவர் வேரன் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களாகவே பிரான்சில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 8,975 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாரம், ஒவ்வொரு நாளும் சராசரியாக 55 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன் பொருள் நம் நாட்டில் மாதத்திற்கு சராசரியாக 1,500-2,000 பேர் ஐ.சி.யூ பிரிவில் சேர்க்கப்படுகின்றனர் என்பது ஆகும் என சுகாதார துறை அமைச்சர் ஆலிவர் வேரன் கூறியுள்ளார்.

மேலும், அவர் அடுத்த இருவாரங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். தீவிர சிகிச்சைப் பிரிவில் நிறைய நபர்கள் அனுமதிக்கப்படலாம். பிரான்ஸில் ஊரடங்கு தளர்வால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிரான்ஸ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனாவுடன் எதிராக போராட வேண்டும். மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காலக்கட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீப நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டனர். ஐரோப்பாவின் ஒரு சில நாடுகளில் பள்ளிகளும் திறக்கப்பட்டுவிட்டன.

ஆனால் இப்போது மீண்டும் பிரான்ஸில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் பல மாதங்கள் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்