பிரான்சின் பிரபல நகரில் புதிய கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு! உள்ளூர் அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதைத் தடுக்கும் முயற்சியாக நைஸ் நகரில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

10 க்கும் மேற்பட்டவர்களின் குழு மற்றும் குடும்பமாக கூட தடைசெய்தது விதிக்கப்பட்டுள்ளது

பார்களில் இசை நிகழ்ச்சியையை தடை செய்வதையும், வெளிபுறத்தில் மது அருந்துவதற்கான கடுமையான விதிகளையும் மற்றும் நகரின் பராமரிப்பு இல்லங்களில் உள்ள முதியவரை சந்திக்க அனுமதியில்லை என உள்ளூர் அதிகாரிகள் அறிவித்தனர்.

மற்ற கட்டுப்பாடுகள் இந்த வார தொடக்கத்தில் மார்சேய் மற்றும் போர்டியாக்ஸில் அறிவிக்கப்பட்டதைப் போன்றவை.

மூன்று நகரங்களும் இப்போது விளையாட்டு போட்டிகளிலோ அல்லது பிற பொது நிகழ்வுகளிலோ கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையை 5,000 முதல் 1,000 வரை குறைக்கப்பட்டுள்ளன.

நைஸ் நகரின் தலைவரான பெர்னார்ட் கோன்சலஸ், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்க குடும்பக் கூட்டங்களில் விவேகமாக இருக்குமாறு மக்களை வலியுறுத்தினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்