பிரான்சில் ஒரே நாளில் 3 மடங்கு அதிகரித்த கொரோனா இறப்பு: என்ன நடந்தது? உண்மையை விளக்கிய அதிகாரிகள்

Report Print Basu in பிரான்ஸ்
3341Shares

பிரான்சின் தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்ததற்கான காரணம் குறித்து சுகாதார அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை பிரான்சில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 154 என சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இதன் மூலம் பிரான்சில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,249 ஆக அதிகரித்துள்ளது

வெள்ளிக்கிழமை மட்டும் 154 உயிரிழந்தது, தினசரி இறப்பு எண்ணிக்கையில் நான்கு மாத இல்லாத அளவிற்கு உயர்வாகவும், கடந்த வாரத்தின் அளவை விட மூன்று மடங்காகவும் அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை பதிவான 154 இறப்பு எண்ணிக்கையில் பாரிஸுக்கு அருகிலுள்ள ஒரே மருத்துவமனையில் 76 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என நாட்டின் தேசிய சுகாதார நிறுவனமான Santé Publique பிரான்ஸ் ஆன்லைனில் வெளியிட்ட விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

குறித்த மருத்துவமனைியல் முன்னர் ஏற்பட்ட மரணங்கள் பதிவு செய்யபப்படாமல் இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் அனைத்து மரணங்களும் பதிவு செய்யப்பட்டதால் தினசரி வழக்கு எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் என Santé Publique பிரான்ஸ் விளக்கமளித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்