பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு உதவுவதற்காக பிரான்ஸ் புதிய கடன் வழங்கும் திட்டம் ஒன்றை பிரான்ஸ் கொண்டு வர உள்ளது.

கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே பயங்கர கடனில் இருக்கும் நிலையில், இந்த திட்டம் சற்று வித்தியாசமாக செயல்படுகிறது.

வரும் திங்கட்கிழமை நிதித்துறை வசம் ஒப்படைக்கப்பட இருக்கும் இந்த திட்டத்தின்படி, வங்கிகள் முதலில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கிவிட்டு, கடனில் 90 சதவிகிதத்தை நிறுவன முதலீட்டாளர்களிடம் ஒப்படைத்துவிடும்.

இதனால், வங்கிகள், வெறும் பத்து சதவிகித கடன் மீதான அபாயத்தைக் குறித்து கவலைப்பட்டால் போதும்.

இத்திட்டத்தில் மீதமுள்ள பணம் பொது நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவதால் நல்ல உத்தரவாதம் உள்ளது என்பதால் நிதி வழங்குபவர்களும் பயப்படத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்