பிரான்சில் ஊரடங்கு விதிகளை மதிக்காத மக்கள்... பொலிசாருக்கு புதிய உத்தரவுகள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் தொடர்ந்து மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக புகார்கள் வந்துகொண்டிருப்பதையடுத்து, பொலிஸ் ரோந்து செல்வதை அதிகரிப்பது முதல் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin, சரியான காரணமின்றி வெளியே நடமாடுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

பிரான்சில், அக்டோபர் மாதம் 30ஆம் திகதி இரண்டாவது முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் முறை விதிக்கப்பட்டதைப் போல் இப்போது கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை. என்றாலும், மக்கள் விதிகளை மதிக்க தவறுவதாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 60 சதவிகிதம் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

இப்படி விதிகளை மீறுவோரை தடுப்பதற்காக, எல்லா இடங்களிலும் அதிக பொலிசாரை நிறுத்தும்படி பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலுள்ள படுக்கைகள் 90 சதவிகிதம் நிரம்பிவிட்ட பாரீஸில் அதிக அளவில் சோதனை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அக்டோபர் 30ஆம் திகதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின், விதிகளை மீறியதாக பொலிசார் 65,000 பேருக்கு அபராதம் விதித்துள்ளதும், அவற்றில் 20,000 பேருக்கு பாரீஸ் பகுதியில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்