பிரான்சில் கொரோனா வைரஸின் 2-வது அலை உச்சத்தை எட்டியிருக்கலாம்! எச்சரிக்கும் சுகாதர நிறுவனம்

Report Print Santhan in பிரான்ஸ்
132Shares

பிரான்சில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்கனவே உச்சத்தை எட்டியிருக்கலாம் என்று சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இதுவரை நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48,265-ஆக உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் நாட்டில் இரண்டாவது அலை உச்சத்தை எட்டியிருக்கலாம், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

அதே சமயம், கடந்த வாரம் நாட்டில் புதிதாக கொரோனா தொற்று நோய் 40 சதவிதம் குறைந்துள்ளது. மருத்துவமனையில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 13 சதவிகிதம் குறைந்துள்ளது.

புதிதாக தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் ஒன்பது சதவீதம் குறைந்துள்ளதாக சண்டே பப்ளிக் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், வரும் செவ்வாய் கிழமை கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து பேசுவார் என்று ஜனாதிபதி மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

பிரான்சின் இரண்டாவது பூட்டுதல் நடவடிக்கைகள் எவ்வாறு, எப்போது எளிதாக்கப்படலாம் என்பதைப் பற்றி மேக்ரான் இதில் பேசுவார் என்று கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்