பிரான்ஸ் தலைநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் அகதிகள் சிலர் படுகாயம்! வெளியான தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்
321Shares

பிரான்ஸ் தலைநகரில் அகதிகள் சிலர் தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் 18 ஆம் வட்டாரத்தின் rue Marc Séguin வீதியில் அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்குள்ள வரவேற்பு முகாமில், நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ கட்டிடத்தில் அடுத்தடுத்து பரவியதால், உடனடியாக இது குறித்து தீயணைப்பு படைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்த வந்த தீயணைப்பு படையினர் முகாமில் தங்கியிருந்த 360 பேரை உடனடியாக வெளியேற்றினர்.

அதன் பின் தீயை உடனடியாக அணைத்த தீயணைப்பு படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் முடிவில் எட்டு அகதிகள் காயமடைந்திருந்ததாகவும், அவர்களில் ஐவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

தீ முதலாவது மற்றும் இரண்டாவது தளத்தில் பரவியதால், கட்டிடம் முற்றாக சேதப்படுத்தியிருந்ததாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்