ஜேர்மனியில் பாகிஸ்தான் நபர் மீது இனவெறி தாக்குதல்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Peterson Peterson in ஜேர்மனி

ஜேர்மனியில் பாகிஸ்தான் குடிமகன் மீது இனவெறி தாக்குதல் நடத்திய இரண்டு வாலிபர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஜேர்மனியில் Saxony-Anhalt மாகாணத்தில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 34 வயதான நபர் ஒருவர் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்தாண்டு யூன் மாதம் இந்த நபருக்கும் உள்ளூரைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறு முற்றியதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து பாகிஸ்தான் நபரை சரமாரியாக தாக்கி ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

துரதிஷ்டவசமாக அவ்வழியாக வந்த ரயில் ஒன்று நபர் மீது லேசாக மோதிவிட்டு சென்றுள்ளது. இதில் நபரின் கை உடைந்துள்ளது.

பாகிஸ்தான் நபரை கொலை செய்ய முயன்றதாக கூறி 23 மற்றும் 20 வயதான இரண்டு வாலிபர்களை பொலிசார் கைது செய்தனர்.

இருவரின் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது நீதிபதியின் முன்னிலையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

பாகிஸ்தான் குடிமகன் மீது இனவெறி தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக 23 வயதான நபருக்கு 6 ஆண்டுகள் 6 மாதங்களும், 20 வயதான வாலிபருக்கு 4 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments