பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களுக்கு 50 மில்லியன் யூரோ அபராதம்: புதிய சட்டம் அமுலாகியது

Report Print Peterson Peterson in ஜேர்மனி

ஜேர்மனியில் சட்டவிரோதமான பதிவுகளை நீக்காத பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமுலாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் 10 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் புகலிடம் கோரி வந்துள்ளதால் இவர்கள் மீது இனவெறியை தூண்டும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி வருகிறது.

வன்முறையை தூண்டுவது, வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துவது, மதம் தொடர்பான பிரிவினைவாதத்திற்கு ஊக்கம் அளிப்பது உள்ளிட்ட தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர ஜேர்மன் அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது.

மேலும், சட்டவிரோதமான பதிவுகளை பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் 24 மணி நேரத்திற்குள் நீக்காவிட்டால் அபாரதம் விதிக்கப்படும் என ஜேர்மன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இப்புதிய சட்டத்தை அமுலாக்க பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இவ்வாக்கெடுப்பிற்கு பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில், இச்சட்டம் தற்போது அமுலாகியுள்ளது.

ஜேர்மன் சட்டங்களுக்கு எதிராக பகிரப்படும் தகவல்களை 24 மணி நேரத்திற்குள் நீக்காவிட்டால் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்படும் என ஜேர்மன் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments