இணையத்தில் வெளியான 4 வயது சிறுமியின் ஆபாச வீடியோ: பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸ்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
2324Shares
2324Shares
lankasrimarket.com

ஆபாச இணையதள பக்கத்தில் 4 வயது சிறுமியின் காணொளி ஒன்று வெளியானதை அடுத்து, குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு ஜேர்மன் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரபல ஆபாச இணையதள பக்கத்தில் 4 அல்லது 5 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரின் ஆபாச வீடியோ வெளியானதை அடுத்து ஜேர்மனி மத்திய பொலிசார் மற்றும் இணையதள குற்றவியல் பொலிசார் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

குறித்த வீடியோவானது கடந்த யூலை மாதத்தில் அந்த இணையதளத்தில் முதன் முறையாக வெளியானது என்றும் ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இரையாக்கப்பட்டு வருகிறார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சிறுமியை குறித்த நபர் அல்லது கும்பலிடம் இருந்து மீட்கும் வரை தேடுதல் வேட்டை முழு வீச்சுடன் தொடரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுவரையில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் குற்றவாளியின் தகவல்கள் எதுவும் சிக்காத நிலையில் பொதுமக்களின் பங்களிப்பு பேருதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

பழுப்பு நிற கண்கள் கொண்ட சிறுமி ஜேர்மன் மொழி பேசுபவராகவும் மெலிந்த உடற்கட்டு கொண்டவராகவும், குறித்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை அணுகவும் கோரியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்