டிரம்ப்பின் அறிவிப்பிற்கு ஆதரவு அளிக்க மாட்டேன்: ஏஞ்சலா மெர்கல்

Report Print Kabilan in ஜேர்மனி

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்ததற்கு, ஆதரவு தரப்போவதில்லை என ஜேர்மனியின் Chancellor ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கு, மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு ஆதரவு தர போவதில்லை என ஜேர்மனியின் Chancellor ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜேர்மனியின் வெளியுறவு துறை அமைச்சர் Sigmar Gabriel கூறுகையில்,

‘டிரம்பின் இந்த முடிவு, பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதலை உருவாக்கும் வகையில் உள்ளது. இது எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போன்றதாகும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்