பாலியல் வன்முறைக்காக மீண்டும் சிறை செல்லும் ஜேர்மன் பாதிரியார்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
180Shares
180Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் பாலியல் குற்றங்களுக்காக ஏற்கனவே சிறை சென்ற முன்னாள் பாதிரியார் ஒருவர் 108 பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் மீண்டும் சிறை செல்லவிருக்கிறார்.

Thomas Maria B (53) என்னும் அந்த முன்னாள் கத்தோலிக்க பாதிரியார் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்காக 2003 முதல் 2009 வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் போலி ஆவணங்கள் மூலம் மீண்டும் பாதிரியாராவதற்கு அனுமதி பெற்றார்.

இம்முறை ஐந்து பையன்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 108 வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டுள்ளன.

மேலும் 18 வயது பெண் ஒருத்தியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்காகவும் தாக்கியதற்காகவும், சிறார் ஆபாச படங்களை வைத்திருந்ததற்காகவும் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்த குற்றங்களை அவர் ஜேர்மனியின் Mainz மற்றும் Deggendorf நகரங்கள், Austria, Switzerland, Italy மற்றும் Poland ஆகிய நாடுகளில் நிகழ்த்தியுள்ளார் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த குற்றங்களுக்காக அவருக்கு Bavaria நீதிமன்றம் எட்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

ஆனால் சிறைத்தண்டனையை அனுபவிக்கும் முன் பல வருடங்களுக்கு அவர் மனநலக் காப்பகம் ஒன்றில் சிகிச்சைக்குட்பட இருக்கிறார்.

சிகிச்சைக்குப் பின்னும் அவர் சமுதாயத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவராக இருக்கிறாரா இல்லையா என்பதைப் பொருத்தே அவர் மனநலக் காப்பகத்திலிருந்து விடுவிக்கப்படுவாரா இல்லையா என்பது முடிவு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி Thomas Trautwein தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்