ஜேர்மனியில் மேர்க்கெல் நான்காவது அரசாங்கம் இனி இதற்கு மட்டும் தான் முன்னுரிமை அளிக்கும்

Report Print Athavan in ஜேர்மனி

ஆறு மாதகால அரசியல் குழப்பதிற்கு பின்னர் இன்று நான்காவது முறையாக ஜேர்மனியின் சான்சிலர் பதவியில் அமரும் ஏஞ்சலா மேர்க்கெல் அடுத்த நான்காண்டு காலதிற்கு தனது அரசு எதற்கெல்லாம் முன்னுறிமை அளித்து செயல்படும் என்பதை அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்:

ஐரோப்பிய ஒன்றியத்தை சீர்திருத்தம் செய்வதற்கான முயற்சிகள், உள்நாட்டு அரசின் செயல்பாட்டை அதிகரித்தல், பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவைக்கு ஜேர்மனி முன்னுரிமை அளிக்கும்.

பிரான்சோடு உள்ள நெருங்கிய நட்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாணயமான யூரோவை சீர்திருத்துவதால் அதன் மூலம் உலகலாவிய நிதி நெருக்கடிகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத்தை தற்காத்து கொள்ள முடியும்.

பிரான்ஸ் ஜானாதிபதி இம்மானுவேல் மேக்ரான் முன்வைத்த ஐரோப்பிய நாணய நிதியம் எனும் அமைப்பை உருவாக்கி நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு கடன் கொடுக்க முடியும் எனும் திட்டத்தையும் ஜேர்மனி எச்சரிக்கையுடன் அணுகும்.

ஏனெனில் கடனாக கொடுக்கப்படும் ஜேர்மனி நிதி திரும்பகிடைப்பதில் சிக்கல் உள்ளது அது பற்றி அடுத்த வாரம்னடை பெற உள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு வரும் மேக்ரானிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று ஏஞ்சலா மேர்க்கெல் தெரிவித்தார்.

அகதிகள் குடியேற்றம்:

ஜேர்மனியில் அடைக்கலம் தேடும் ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு நாட்டின் கதவுகளை திறக்க 2015 ம் ஆண்டு மேர்க்கெல் முடிவு செய்ததால் தான் அவரது கட்சிக்கு தேர்தலில் 13% மக்கள் ஆதரவு குறைந்து அரசியல் குழப்பத்திற்கு வித்திட்டது.

இதனால் வருடத்துக்கு 200,000 அகதிகளுக்கு மட்டுமே புகலிடம் வழங்கப்படும். அகதி முகாம்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதிகளவு அகதிகளை அனுமதிப்பதால் பிற நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடுகிறது எனவேஅகதிகளுக்கு புகலிடம் வழங்கப்படும் அதே வேகத்தில் இங்கிருக்கும் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றார்.

எதிர்கால பொருளாதாரப் பாதுகாப்பு முறைகள்:

ஆட்டோமேஷன், உலகமயமாக்கல் போன்றவைகளால் ஜேர்மனி மக்கள் பலர் தங்கள் சொந்த தொழில் எதிர்காலத்தில் பாதிக்கப்படுமோ என்று பயப்படுகிறார்கள்.

மேர்க்கெலின் நான்காவது அரசாங்கம் உள்கட்டமைப்புகளில் அதிக முதலீடு செய்வது, கல்வி , ஓய்வூதியம்,இணையவசதி போன்றவையை சீர்திருத்தம் செய்து அதற்கு அதிக நிதி ஒதுக்கி மக்களின் பயம் போக்கப்படும்.

ஜேர்மனியில் பெருகிவரும் சமத்துவமின்மை பற்றிய கவலைகளை ஒப்புக் கொண்டு அதைப்பொக்க தக்க நடவடிக்கையை இந்த நான்காவது அரசாங்கம் எடுக்கும் என்றார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்