சிரியா பாதுகாப்பான ஒரு நாடு: ஜேர்மனி எதிர்க்கட்சியினர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சிரியா பாதுகாப்பான நாடு என ஜேர்மனியின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான Alternative for Germany (AfD)யைச் சேர்ந்த அரசியல்வாதிகள் கூறியுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் தற்போது வாழும் அரை மில்லியன் சிரிய அகதிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பும் தங்கள் கட்சியின் முயற்சிக்கு பலமூட்டும் விதமாக Alternative for Germany கட்சியைச் சேர்ந்த ஏழு அரசியல்வாதிகள் சிரியாவுக்குச் சென்றனர்.

நேற்று பேட்டியளித்த அவர்கள் ஜேர்மனியில் புகலிடம் கோரும் சிரிய மக்களுக்கு சிரியா பாதுகாப்பான நாடுதான் என்று தெரிவித்தனர்.

Christian Blex தலைமையில் சிரியா சென்ற அந்தக் குழுவினர், சிரியாவின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதைத் தாங்களே நேரில் சென்று காண்பதற்காகச் சென்றனர்.

இந்த பயணத்திற்கு ஜேர்மனி அரசாங்கமும் இதர எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

சிரியாவில் யுத்தம் நடைபெறும் இடங்கள் இல்லை என்பதை மறுக்க முடியாது, அதே நேரத்தில் அழிக்கப்படாத பல பகுதிகள் அங்கு உள்ளன என்று Blex தெரிவித்தார்.

ஜேர்மனியில் வாழும் சிரிய அகதிகள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என அவரது குழுவினர் வலியுறுத்தினர்.

Armin-Paulus Hampel என்னும் அரசியல்வாதி “ஜேர்மனி அரசாங்கம் அல்லது ஐரோப்பிய ஒன்றியம் பணத்தின்மூலம் சிரிய அதிபரை, அகதிகளை சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள் என்னும் உறுதியின்பேரில் மீண்டும் அழைத்துக் கொள்ளச் செய்யவேண்டும்” என்று ஆலோசனை கூறினார்.

சிரியப் பிரச்சினைகள் தொடங்கி கடந்த வாரத்துடன் எட்டு ஆண்டுகள் முடிவடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்