ஜேர்மன் சான்சலர் வெளியிட்ட ஜி7 மாநாட்டின் பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
177Shares
177Shares
lankasrimarket.com

சமீபத்தில் நடந்து முடிந்த ஜி7 உச்சிமாநாட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் வெளியிட்ட புகைப்படமே தற்போது உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

குறித்த புகைப்படமனது ஜேர்மன் சான்சலர் மெர்க்கலுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் இடையேயான வர்த்தக மோதல் தொடர்பான காரசார விவாதத்தின்போது எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

அதில் ஜி7 உச்சிமாநாட்டின் தலைவர்கள் அனைவரும் பரபரப்பு தொற்றிய முகத்துடன் காணப்படுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எந்தவித பதற்றமும் இன்றி மிக சாதாரணமாக அமர்ந்திருப்பதும், ஆனால் மெர்க்கல் டிரம்பின் கருத்துக்காக உற்றுநோக்குவது போலவும் அந்த புகைப்படம் உள்ளது.

முன்னதாக ரஷ்யாவுக்கு ஆதரவாக டிரம்ப் பேசியதாகவும், ஆனால் அவரது கருத்துக்கு ஜேர்மன் சான்சலர் மெர்க்கல் மற்றும் கனேடிய பிரதமர் ட்ரூடோ ஆகியோர் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி குறித்த மாநாட்டில் பிற நாடுகளின் மீது வர்த்தகத் தடைகளை விதித்திருப்பது தொடர்பாக டிரம்புக்கும், பிற நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2014-ம் ஆண்டு கிரிமியாவை இணைந்து கொண்டதைத் தொடர்ந்து ரஷ்யா இந்த மாநாட்டிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்