மெர்க்கல் அரசு மீது அதிருப்தியில் ஜேர்மானியர்கள்: காரணம் இதுதான்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

அகதிகள் பிரச்சினையால் ஜேர்மன் அரசில் ஏற்பட்ட பிரச்சினைகளால் மெர்க்கல் அரசாங்கம் தனது நற்பெயரை இழந்துள்ளது.

ஜேர்மானியர்களில் ஐந்தில் ஒருவர் மட்டுமே மெர்க்கலின் ஆட்சி தங்களுக்கு திருப்தியளிப்பதாக தெரிவித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Deutschlandtrend ஆய்வு ஒன்றில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம்பேர் ஆளும் கூட்டணி குறித்து அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

21 சதவிகிதம்பேர் மட்டுமே ஆளும் தலைமை திருப்தியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.

கூட்டணியில் ஏற்பட்ட பிரச்சினையால் தனது அரசு கவிழும் என்ற நிலை வந்ததால், ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் எல்லையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டார்.

முரண்பாடான இந்த புதிய திட்டத்தின்படி, ஆஸ்திரிய எல்லையில் விசாரணை மையங்களை அமைத்து இன்னொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாட்டில் பதிவு செய்யப்பட்ட அகதிகளை ஜேர்மனிக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முரண்பாட்டால் ஏஞ்சலா மெர்க்கலின் புகழ் 50 சதவிகிதத்திலிருந்து 48ஆக கீழிறங்கியது.

ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஏஞ்சலா கூட்டணியின் மீதான தனது கட்டுப்பாட்டை இழந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு நேற்றும் அதற்கு முன் தினமும் 1,505 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்