நான் ஏன் இப்படி சொல்ல வேண்டும்? புலம்பெயர்ந்தவன் என்ற விமர்சனத்திற்கு ஆளான ஜேர்மன் வீரரின் ஆதங்கம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

நான் ஜேர்மன் நாட்டில் வசித்தாலும் எனது பராம்பரியத்தை விட முடியாது என சமீபத்தில் இனவெறிக்கு ஆளாகி ஓய்வை அறிவித்த மெசுட் ஒஸிஸ் தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் அணி 2018 ரஷ்ய உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியதற்கு ஒஸிலின் சொதப்பலான ஆட்டமே காரணம் என்று பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்டது.

மெசுட் ஒசிலின் பெற்றோர்கள் துருக்கியர்கள் என்பதால் அந்நாட்டு ரசிகர்கள் இவர் மீது விமர்சனங்களை முன் வைத்தனர். ஜெர்மனி கால்பந்து சங்கத்திலும் ஒஸிலுக்கு ஆதரவு இல்லாமல் போனது. இதற்கு ஒஸில், போட்டியில் வென்றால் நான் ஜேர்மனியன், தோற்றால் நான் புலம்பெயர்ந்தவன் என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்று வேதனைப்பட்டார்.

மேலும் எனக்கு 2 இருதயங்கள், ஒன்று ஜேர்ம்னி இன்னொன்று துருக்கி என்று கூறிய அவர், என் மீது இனவெறி பாகுபாடு காட்டிய ஜேர்மன் அணிக்காக இனி விளையாடப்போவதில்லை என்றும் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் இருந்து தான் விலகப் போவதாகவும் கூறி தனது ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் 48 வருடங்களாக ஜேர்மனியில் வசித்து வருகிறேன், என்னிடம் ஜேர்மன் பாஸ்போர்ட் உள்ளது. நான் ஒரு ஜேர்மன் பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளேன். ஆனால் நான் ஒரு ஜேர்மனியன் என்று என்னால் பெருமையாக சொல்ல முடியாது.

நான் ஏன் அப்படி சொல்ல வேண்டும். என்னால் எனது துருக்கி நாட்டின் பராம்பரியத்தையும் மறுக்க முடியாது என கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்