ஜேர்மானியர் உட்பட மூவரைக் கத்தியால் குத்திய அகதி: துணிந்து செயல்பட்ட மேயர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
352Shares
352Shares
ibctamil.com

ஜேர்மனியின் Ravensburg நகரில் அகதி இளைஞன் ஒருவன் மூவரைக் கத்தியால் குத்தியதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பத்தொன்பது வயதுடைய ஆப்கன் நாட்டைச் சேர்ந்த அகதி இளைஞன் ஒருவன், ஜேர்மனியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரையும் 19 மற்றும் 20 வயதுடைய சிரிய அகதிகள் இருவரையும் கத்தியால் குத்தினான்.

மூவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தாக்குதலுக்கான காரணம் தெளிவாக தெரியாவிட்டாலும் அதிகாரிகள் இது ஒரு தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

சம்பவம் நடந்தபோது, எதிர்பாராத திருப்பமாக Ravensburgஇன் மேயரான Daniel Rapp அந்த பகுதியில் இருந்திருக்கிறார்.

கத்தியுடன் அவர் முன் வந்த அந்த நபர், மேயரையும் மிரட்டியிருக்கிறான். துணிச்சலுடன் செயல்பட்ட மேயர் கத்தியைக் கீழே போடும்படி சத்தமிட அந்த நபரும் அவ்வாறே செய்திருக்கிறான்.

விரைந்து வந்த பொலிசார் அவனைக் கைது செய்தனர்.

இந்த குற்றத்தை அந்த ஆப்கன் அகதி மட்டுமே செய்துள்ளதாகவும் அவனுடன் வேறு கூட்டாளிகள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்