பந்தயத்தில் ஜெயிப்பதற்காக வெடிகுண்டு வைத்த ஜேர்மானியர்: தண்டனை என்ன?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஷேர்கள் வீழ்ச்சியடையும் என பந்தயம் கட்டிவிட்டு, அதற்காக நாட்டில் குழப்பம் உண்டாக்குவதற்காக வெடிகுண்டு வைக்கும் அளவிற்கு துணிந்த ஒரு நபர் தற்போது ஆயுள் தண்டனை பெற இருக்கிறார்.

ஜேர்மானியர் ஒருவர் கால்பந்தாட்ட வீரர்கள் சென்ற ஒரு பேருந்தின்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Sergej Wenergold (29) பந்தயம் கட்டி பணம் சம்பாதிப்பதற்காக, ஒரு நிறுவனத்தின் ஷேர்களை வீழ்ச்சியடையச் செய்யும் முயற்சியில், கால்பந்தாட்ட வீரர்கள் சென்ற ஒரு பேருந்தின்மீது வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தினார்.

11 மாதங்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு Dortmund நகர நீதிமன்றம், Sergej, 28 பேரைக் கொல்ல முயன்றதற்காக தண்டனை பெறுவாரா என்பதை இன்று முடிவு செய்ய உள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் Sergej ஆயுள் தண்டனை பெற நேரிடும். கால் பந்தாட்ட வீரர்கள் தங்கிய அதே ஹோட்டலில் தங்கிய Sergej பேருந்தில் குண்டு வைத்ததோடு, தீவிரவாத அமைப்பு ஒன்று அந்த தாக்குதலை நடத்துவதுபோல கடிதங்களையும் விட்டுச் சென்றார்.

10 நாட்களுக்குப்பின் கைது செய்யப்பட்ட Sergej, பின்னர் தனது தவறுக்காக நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார் என்றாலும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கப்படுவதோடு ஜேர்மனி வழக்கப்படி, பரோலும் 15 ஆண்டுகளுக்குப் பின்தான் வழங்கப்படும்.

இதற்கிடையில் குண்டு வெடிப்புக்கு அடுத்த நாள் விளையாடிய அந்த குறிப்பிட்ட கால் பந்து அணி தோல்வியடைந்ததோடு, அதிர்ச்சியிலிருந்து வெளி வரும் முன்னரே விளையாட்டு வீரர்களை விளையாடச் செய்ததற்காக அந்த அணியின் பயிற்சியாளர் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்