கண்டெய்னரில் துணிகளுக்கிடையே குழந்தையின் உடல்: விசாரணையில் பொலிசாருக்கு அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கண்டெய்னரில் பழைய துணிகளுக்கு நடுவில் ஒரு குழந்தையின் உடக் கிடைத்த நிலையில், தீவிர விசாரணையில் குற்றவாளியைக் கண்டுபிடித்த பொலிசாருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

ஜேர்மனியிலிருந்து போலந்துக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றில் துணிகளுக்கிடையே ஒரு குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிசார், அதை அனுப்பியவரை கண்டுபிடித்தனர்.

போலந்தின் Kielce நகரில் Duisburgஇலிருந்து அனுப்பப்பட்ட ஒரு கண்டெய்னரில் இருந்த துணிமணிகளை பிரிக்கும்போது, பிறந்த பச்சிளம் குழந்தையின் உடல் ஒன்று துணிகளுக்கிடையில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை பணியாளர்கள் கண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேற்கு ஜேர்மனியின் Duisburg நகரில் 35 வயதுடைய ஒரு பெண்ணை ஒரு அபார்ட்மெண்டில் கண்டுபிடித்து அவரது வீட்டை சோதனையிட்டனர்.

அப்போது, இரத்தக்கறை படிந்த படுக்கை விரிப்புகளைக் கண்டுபிடித்தனர்.தொடர்ந்து சோதனையிடும்போது, துணிகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் மறைத்துவைக்கப்பட்ட இன்னொரு குழந்தையின் உடல் இருப்பதைக் கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.

அது தன்னுடைய குழந்தைதான் என்பதை ஒப்புக் கொண்ட அந்த பெண், போலந்தில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையைக் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்.

கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்