பேஸ்புக் நிறுவனத்தின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது ஜேர்மனி

Report Print Givitharan Givitharan in ஜேர்மனி

பேஸ்புக் நிறுவனமானது தான் கொள்வனவு செய்த இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் என்பவற்றுடன் பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் என்பவற்றினை ஒன்றாக இணைத்து சேவை வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஜேர்மன் நாட்டினை சேர்ந்த தகவல் ஆணைக்குழு இதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

அதாவது அனுமதியின்றி இம் மூன்று அப்பிளிக்கேஷன்களையும் ஒன்றாக இணைக்க கூடாது என கட்டளையிட்டுள்ளது.

இம் மூன்று அப்பிளிக்கேஷன்களிலும் உள்ள பயனர்களின் தரவுகள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பரிமாற்றப்படும் என்பதனாலேயே இவ்வாறு கட்டளை பிறப்பித்துள்ளது.

இதேவேளை பேஸ்புக் நிறுவனமானது இதற்கு பதிலளித்து தகவல் அனுப்பியுள்ளது.

இதில் மூன்று அப்பிளிக்கேஷன்களும் இணைக்கப்படின் பயனர்களின் பாதுகாப்பினை அதிகரிக்க முடியும் எனவும், போலியான தகவல்கள் பரப்பப்படுவதை இலகுவாக கண்காணிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers