ஜேர்மனி நாட்டின் சர்வாதிகாரியான ஹிட்லரின் ஓவியம் ஏலம் எடுக்க யாரும் முன்வராதது அந்நாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனி நாட்டில் சர்வாதிகாரியாக விளங்கியவர் அடால்ப் ஹிட்லர்.வரலாற்றில் முக்கிய இடம் வகித்தவர் கிட்லர். அவரை பற்றி கூறினாலே சர்வதிகாரி என்றும், கொடியவர் என்றும் பல்வேறு நிலைபாடுகளை மக்கள் முன்வைப்பர். சாதாரண ராணுவ வீரராகஇருந்த காலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார் கிட்லர்.
அவரது ஓவியங்கள் அவ்வப்போது உலகின் பல்வேறு இடங்களில் பிரபல ஏல நிறுவனங்களால் ஏலம் விடப்பட்டு வருகின்றது. சமீபத்தில் ஜேர்மனியில் உள்ள நுரம்பெர்க்நகரில் ஹிட்லரின் ஓவியம் ஏலம் விடப்பட்ட போது அந்த ஓவியத்தை யாரும் ஏலம் எடுக்கவில்லை.
இதுகுறித்து ஜேர்மனி பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தியில், அந்த ஓவியத்தின் ஆரம்ப விலையே 21500 டொலர். எனவே, அந்த ஓவியம் விலை போகவில்லை' என்றும், ஹிட்லரின் ஓவியங்கள் என்ற பெயரில் போலி ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றதாக செய்தி பரவி உள்ளது. இதனால் இந்த ஓவியம் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை' என்றும் செய்திகள் வெளியிட்டுள்ளன.