ஆயுத ஏற்றுமதியில் சரிவை சந்தித்த ஜேர்மனி

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜேர்மனிய ஆயுத ஏற்றுமதிகள் மீண்டும் குறைந்துவிட்டன என பொருளாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொருளாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது, கட்டுப்பாடு மற்றும் பொறுப்பான" ஏற்றுமதி கொள்கையை ஜேர்மன் பின்பற்றி வருகிறது.

2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அரசாங்கம் 1.12 பில்லியன் யூரோ ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

கடந்த ஆண்டின் ஏற்றுமதியை ஒப்பிடுகையில் 7.4 சதவிகிதமாக குறைந்துள்ளது.

ஜேர்மன் அரசாங்கம் யேமனில் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதிகளை ஓரளவு தடை செய்தது. சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜாமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சவுதிக்கு ஆயுத ஏற்றுமதியையும் ஜேர்மன் தற்காலிகமாக தடை செய்ததையடுத்து ஏற்றுமதி குறைந்தது.

2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜேர்மனிய இராணுவ ஆயுதங்கள் அமெரிக்கா (169 மில்லியன் யூரோ) மற்றும் பிரித்தானியாவுக்கு ( 157 மில்லியன் யூரோ) அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்