ஹொட்டல் அறையில் மர்மமாக இறந்துகிடந்த 3 ஜேர்மனியர்கள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியின் Bavarian நகரில் அமைந்துள்ள ஹொட்டலில் 3 பேர் மர்மமாக இறந்துகிடந்தது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Ilz ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க ஹொட்டலில் 53 வயதுடைய ஆண் நபர் மற்றும் 33, 30 வயதுடைய இரண்டு பெண்கள் இறந்து கிடந்துள்ளனர்.

இவர்கள் இறப்பில் மற்றொருவர் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும், மூன்று இரவுகள் தங்குவதற்கு இவர்கள் தெரிவித்திருந்ததாகவும், ஆனால் காலை உணவு குறித்து எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என ஹொட்டல் மேலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்கள் இறந்துகிடந்த இடத்தில் வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்