ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்படும் அகதிகளின் பரிதாப நிலை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

அகதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடு என உலகளாவிய புகழ் பெற்ற ஜேர்மனி, 2016ஆம் ஆண்டு முதல் சுமார் 600 ஆப்கன் நாட்டவர்களை நாடு கடத்தியுள்ளது. அப்படி நாடு கடத்தப்படும் அகதிகளின் பரிதாப நிலையை சற்றே விவரிக்கிறது இந்த செய்தி.

மே மாதத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானில் ஏராளமான கொலைகள், வன்முறை சம்பவங்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றின்படி, 2019 ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் மட்டுமே, 561 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம், ஆப்கனின் பெரும்பாலான பகுதிகளில் தங்குவது ஆபத்து என்று கூறி, பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இவ்வளவு உண்மைகளுக்கு மத்தியிலும், ஜேர்மனி சமீபத்தில் 26 பேரை ஜேர்மனிக்கு நாடு கடத்தியுள்ளது.

டிசம்பர் 2016 முதல் சுமார் 600 பேர் 24 விமானங்களில் ஆப்கனுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்டு, ஆப்கனின் இறக்கி விடப்படுவோரின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

முன்பு அவர்கள் இரண்டு வாரங்கள் வரை ஹொட்டல்களில் தங்க வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சுமார் 150 யூரோக்களை மட்டும் அவர்கள் கையில் கொடுத்து அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது.

இந்த தொகையைக் கொண்டு ஹொட்டல்களில் எல்லாம் தங்க முடியாது. எனவே மீண்டும் ஆப்கனுக்கு திருப்பி அனுப்பப்படுவோர், தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களின் உதவியை நாட வேண்டியுள்ளது.

குடியமர்வதற்கு உதவியாக ஜேர்மன் அரசுக்கு 799 யூரோக்கள் வரை கோரி விண்ணப்பிக்கும் ஒரு நடைமுறை உள்ளது என்றாலும், அது ஏராளமான ஆவணங்களை நிரப்பி செய்ய வேண்டிய சிக்கலான வேலை என்று கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers