பயங்கரமான ஹெலிகாப்டர் விபத்தில் குடும்பத்துடன் உயிரிழந்த ஜேர்மானியர்: புகைப்படம் வெளியானது

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஸ்பெயின் நாட்டில் கொடூரமான ஹெலிகாப்டர் விபத்தில் குடும்பத்துடன் உயிரிழந்த ஜேர்மானியரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஆகஸ்ட் இன்செல்கமர் என்பவரின் மகன், தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மனைவி கிறிஸ்டினா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் மேக்ஸ் (11) மற்றும் 9 வயது மகள் சோஃபி ஆகியோருடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு மதிய உணவிற்காக பெல் 206 ஹெலிகாப்டரில், தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து அருகாமையில் இருந்த உணவகத்திற்கு குடும்பத்துடன் புறப்பட்டுள்ளார். ஹெலிகாப்டரை ரோட்டார்ஃப்ளக் என்ற ஜெர்மன் நிறுவனத்தில் பணிபுரிந்த இத்தாலிய விமானி செட்ரிக் லியோனி இயக்கியுள்ளார்.

உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணியளவில் எதிரே வந்த இலகுரக விமானத்துடன், ஹெலிகாப்டர் மோதி பயங்கரமான விபத்தில் சிக்கியது.

இந்த சம்பவத்தில் விமானி, ஆகஸ்ட் இன்செல்கமர் குடும்பத்தினர் மற்றும் இலகுரக விமானத்தில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த நிலையில் அவருடைய புகைப்படம் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்