ஜேர்மனியின் முக்கிய நகரில் குவிந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்.. காரணம் இதுதான்

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியின் Frankfurt நகரில் கார் தொழிற்சாலைக்கு எதிராக சுமார் 25,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க, அமைதியான முறையில் போராடும் பல்வேறு அமைப்புகள், தற்போது ஐரோப்பா முழுவதும் பரவி வருகின்றன.

கடந்த சூன் மாதத்தில் ஜேர்மனியில் உள்ள ஒரு பெரிய பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை, சுற்றுச்சூழல் மாசுபாடு அடைவதாக கூறி இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்கள் அமைப்பு ஒன்று போராடியதில், அந்த சுரங்கம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில் ஜேர்மனியின் Frankfurt நகரிலும், அதேபோன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் உட்பட சுமார் 25,000 பேர் கார் தொழிற்சாலை ஒன்றின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையிலும், உள் எரிப்பு இயந்திரங்களை கைவிடும் வகையிலும் கார்களை தயாரிக்கவும் அழுத்தம் கொடுத்தனர்.

இதில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர், சைக்கிள்களில் அந்த இடத்திற்கு வந்தனர். அவர்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டாலும், இரண்டு நீளமான மோட்டார் பாதைகள் சீல் வைக்கப்பட்டன. இந்த போராட்டம் குறித்து பிரச்சாரக்குழுவினர் தரப்பில் கூறுகையில்,

‘எதிர்காலம் பேருந்து, ரயில்கள் மற்றும் சைக்கிள்களுக்கு சொந்தமானது என்று நாங்கள் விரும்புகிறோம். அதைத் தவிர வேறு வாகனங்களை நாங்கள் விரும்பவில்லை. உற்பத்தியாளர்கள் பெட்ரோல் மற்றும் டீசலில் இருந்து புகை வெளியேறும் வகையிலான கார்களின் தயாரிப்பு எண்ணிக்கையை குறைக்க வேண்டும். நாங்கள் கார்களை கைவிட விரும்புகிறோம். எங்களுக்கு கார்கள் இல்லாத நகரங்கள் வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

மேலும், காற்று மாசுபடும் வகையில் கார்களை தயாரிப்பவர்களை அவர்கள் ‘காலநிலை கொலையாளிகள்’ என்று குறிப்பிட்டனர்.

ஜேர்மனியின் கார் தொழிற்சாலையை இலக்காகக் கொண்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒத்துழையாமை ஆகியவற்றின் இந்த கலவையானது, ஒரு காலத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் முக்கிய இயக்கியாக இருந்த எட்ட முடியாத நிலையை, இந்தத் துறை இனி அனுபவிக்காது என்பதைக் காட்டுகிறது.

Sand in the Gearbox என்பது ஜேர்மனியின் சுற்றுச்சூழல் இயக்கத்தின் மிகவும் தீவிரமான பிரிவின் பிரதிநிதியாகும். இது கவனத்தை ஈர்க்க உள்நாட்டு ஒத்துழையாமைக்கு ஈடுபட தயாராக உள்ளது.

ஜேர்மனியின் வாகன உற்பத்தித் தொழிலானது, ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் நீண்ட காலமாக இன்றியமையாததாக கருதப்படுகிறது. எனவே, அவர் மின்சார கார்களின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்