லொறியை கடத்தி, நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதிய நபர்: தீவிரவாத தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

நேற்று முன் தினம் லொறி ஒன்றை கடத்திய ஒருவர், சிக்னலில் நின்று கொண்டிருந்த எட்டு வாகனங்கள் மீது மோதியதில், எட்டு பேர் காயமடைந்தனர்.

அவர்களில் ஏழு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. Limburgஇல் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, சிரியாவைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் 2015ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வசித்து வருவதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை அதிகாரிகள் விசாரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

GETTY IMAGES

பிராங்க்பர்ட்டுக்கு தெற்கிலுள்ள Langenஇலுள்ள வீடு ஒன்றில், இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

லொறியை பறிகொடுத்த நபர், தனது லொறியின் கதவை திறந்த ஒருவர், தன்னை வெளியே இழுத்ததாகவும், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, பதிலேதும் கூறாமல் தன்னை இழுத்துப்போட்டுவிட்டு அந்த நபர் லொறியுடன் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த நபருடன் பேசிய மற்றொரு பெண், அவரது மூக்கிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்ததாகவும், அவரது உடைகள் கிழிந்தும், அவரது கைகளில் இரத்தத்துடனும் அவர் காணப்பட்டதாகவும், தனது பெயர் முகமது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் பிற ஜேர்மன் பத்திரிகைகள் அவரது பெயர் ஓமர் என்று குறிப்பிட்டுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்